பாதங்களை மசாஜ் செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா....?

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தலைவலி, மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்றவற்றை போக்குகிறது. அது போல பாதத்திற்கு மசாஜ் செய்தால், அதுவும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்துமாம்.
நாள்தோறும் நின்றபடியே வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் சுலபமாக தாக்குகிறது. அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் பாதங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு தூங்கினாலே நல்ல பலன் கிடைக்கும்.
 
மூட்டு வலி உள்ளவர்கள் சாதாரண எண்ணெய் மசாஜ் போதும் மூட்டு வலிக்கு உடனடி தீர்வு தருவதற்கு. வலி இருக்கும் மூட்டு பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தாலே அதிகப்படியான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தலைவலி, மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்றவற்றை போக்குகிறது. அதுபோல  பாதத்திற்கு மசாஜ் செய்தால், அதுவும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுகிறது.
 
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தூங்குவதற்கு முன்பு 10 நிமிடங்கள் உங்கள் பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இதன்மூலம், உடலில் இரத்த ஓட்டம் சமமாகி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுப்பதால், இரத்த அழுத்தம் சீராகும்.
 
இரவு தூங்குவதற்கு முன்பு பாதங்களுக்கு மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் சீராவதால் மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கமும் வரும். மேலும் தசை பிடிப்பு மற்றும் உடற்சோர்வு ஆகியவை நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்