உலர் உணவுகள், சால்மன் மீன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு போன்றவை வைட்டமின் D-க்கான உணவு ஆதாரங்களாக இருக்கின்றன. உடலில் கால்சியம் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வைட்டமின் D மிக முக்கியமானது. மேலும், பாஸ்பரஸின் அளவை பராமரிக்க உதவியாக இருக்கிறது.
வைட்டமின் D குறைபாட்டிற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் சில உயரமான இடத்தில் வசிப்பது, மாசுபட்ட பகுதியில் இருப்பது, கருமையான சருமம், பருமனாக இருப்பது, குடல் ஆரோக்கியம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். வைட்டமின் D ஆரோக்கிய நன்மைகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அழகையும் மேம்படுத்தும்.
தோலழற்சி: வைட்டமின் D போதுமான உட்கொள்ளாவிட்டால் தோல் சிவத்தல் மற்றும் சரும அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். முகப்பரு: வைட்டமின் D ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது முகப்பருவைத் தடுக்க உதவுகிறது.