எதற்கெல்லாம் நல்லது தெரியுமா துரியன் பழம்...!

துரியன் பழம் அதிக மருத்துவத் தன்மை கொண்ட பழங்களுள் ஒன்று. இதன் மணம் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றத்தைக் கொண்டது. ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். மேலும் மருத்துவ குணங்கள் கொண்டது. 
உடல் சத்து குறைவினாலும், மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து காணப்படும். இதற்கு இவர்கள் வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி  இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன்  பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
 
மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியன் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும். கண்களின் பார்வை நரம்புகள் பலப்படும். தோலை பாதுகாத்து சருமத்தை பளிச்சிட செய்யும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்