தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன பயன் தெரியுமா...?

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத்  தருகிறது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத்தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
 
பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
 
பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 
 
பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
 
கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
 
பெண்களுக்குச் சீரான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும். வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.
 
பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்