பாகற்காய் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான நோயாக இருக்கிறது. இதை வகையான நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக  செயல்படுகிறது. 

பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை  கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது பாகற்காய்.
 
நார்ச்சத்து நிறைந்துள்ள காய்களில் பாகற்காயும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் பாகற்காய் தீர்க்கிறது. 
 
சிறுநீரகங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பாகற்காய் உதவுகிறது. 
 
சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிடுவது நல்லது.
 
பாகற்காய் சாப்பிடுபவர்கள் உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டப்பட்டு உணவு நன்றாக செரிமானம் ஆகச் செய்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உடல் எடையை குறைக்கிறது. 
 
புற்று நோய் தடுப்பு நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்