பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச் சீத வாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும். ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒருமுடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.
பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைசுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களையுடையது.
இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பைய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை முறையே ஆண் பெண் எனக் கருதப் படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும் பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.
பேய்மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை, அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாதுவிலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.