சரும பிரச்சனைகளை தடுக்க தினமும் கற்றாழை ஜெல்!

வெள்ளி, 18 அக்டோபர் 2019 (20:06 IST)
கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட,  இயற்கையாக செடிகளில் கிடைக்கும் ஜெல்லைப்  பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
தேன், மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.
 
வயதாவதால் ஏற்படும் புள்ளிகள், பிம்பிள் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்க, கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் முகத்தை கழுவ வேண்டும்
 
வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.
 
தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய  பிரச்சனையைத் தடுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்