வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் வைக்க குறிப்புகள்....!!

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது.

யோகாசனம் யோகா போஸ் எடை இழப்புக்கு உதவும். இந்த யோகா போஸ் செரிமான செயலை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் நல்ல செரிமானம் சரியான எடை மேலாண்மை வழிவகுக்கிறது. நீங்கள் ஓய்வு நேரங்களில் கூட போஸ் முயற்சி செய்யலாம். இதனால்  உங்கள் வயிறை சுற்றி உள்ள கூடுதல் கொழுப்பு எரிகிறது.
 
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
 
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
 
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
 
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
 
உடல் எடையை குறைக்க சிறந்த பானங்களில் நெல்லிச்சாறு சிறந்த ஒன்றாகும். பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து  அருந்த, உடல் எடை குறையும்.
 
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில்  கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது செரிமானத்தை தூண்டுவதுடன், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்க  உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்