பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த நிவாரணியாகும்.