வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் !!
தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரப்படும் சிறந்த உணவு தேன். உடல் ஆரோக்கியம், அழகு என பலவற்றுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சிறந்த மருத்துவ குணம் கொண்ட இந்த இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை எப்படி செய்வது, இதன் மூலம் பெறும் நன்மைகள் என்னென்ன? இனிக் காண்போம்..
தேவையான பொருட்கள்: வெங்காயம் - அரை கிலோ, தேன் - அரை லிட்டர். செய்முறை: மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். சிறிய சைஸ் வெங்காயமாக இருந்தால் அப்படியே முழுசாகவும் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள். ஒரு பவுலில் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தேன் சிரப்பை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்: காய்ச்சலை போக்கும். தூக்கமின்மை கோளாறை சரி செய்யும். சளி தொல்லை நீங்கும்.
கொலஸ்ட்ரால் குறைக்க உதவும். நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும். செரிமானத்தை ஊக்கவிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.
ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் - தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.
இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சுரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.