இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். இதில் புரதம், தாதுஉப்பு மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
இலந்தை பழம் நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி, உலர்த்தி, கொட்டை நீக்கி பொடி செய்து சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து, அரிசி கஞ்சியில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.
இலந்தை பழத்தின் விதையை நீக்கி விட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி வைத்து கொண்டு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.