சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள முலாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...!!

முலாம்பழம் இனிப்பு சுவையும், நறுமணமும் கொண்டது. இது வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு சத்துக்கள் கொண்டது. வெயில் காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை தணிக்கும் தன்மை இந்த முலாம்பழத்திற்கு உள்ளது.

முலாம்பழத்தின் சதை மற்றும் விதையுடன் சிறிதளவு சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் உற்சாகத்தையும் கொடுக்கிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் இது சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கிறது.
 
கர்ப்பிணி பெண்கள் முலாம்பழத்தை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் குதுகெலும்பு மற்றும் மூளை வளர்ச்சி போன்றவை நன்றாக இருக்கும். இது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது.
 
காய்ச்சிய பாலுடன், விதை நீக்கிய முலாம்பழம், பனங்கற்கண்டு மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இந்த மில்க் ஷேக்கை காலை உணவின் போது  எடுக்கலாம். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
 
முலாம்பழத்தினை உண்டுவர மூல நோய் குணமாகும். மலசிக்கல் நீங்கும், நீர்க்கடுப்பு நீங்கும், அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும். இதில் வைட்டமின்  ஏ, பி, சி மற்றும் தாது பொருட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
 
முலாம்பழம் பித்தத்தை மொத்தமாக அகற்றும். கல்லீரல் கோளாறுகளை போக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும் சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்து.  இப்பழத்தின் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாகும்.
 
முலாம்பழத்துடன் 1/4 ஸ்பூன் சீராக பொடி, சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் 2 சிட்டிகை சுக்குப் பொடி இவற்றை கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்றுவலி மற்றும் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சரியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்