தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!
இரத்த அழுத்தம் இருப்பவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழத்ததை சீராக வைத்துக் கொள்ளும்.
சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.
மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்து உதவும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் பாதி சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள் வயிற்று கோளாறு குணமாகும்.