தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம். சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து வெண்ணெய்யில் கலந்து பூசலாம்.
காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசும் வழக்கம் பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும்.