கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
வெள்ளரிக்காய், நெல்லிக்காய், கோஸ், கொத்தமல்லி, முருங்கைக் கீரை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.