புரோட்டின், ஃபைபர், கால்சியம், தாமிரம், மெக்னீசியம், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல சத்துக்கள் பாதாம் பருப்பில் நிரம்பியுள்ளன.
மெலிந்த உடல் தேகம் உடையவர்கள், உடல் எடையை சற்று அதிகரிக்க பாதாம் சாப்பிடலாம். மேலும் கெட்ட கொழுப்பு குறைவதனால், அதிக உடல் எடை உடையவர்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பாதாம் சாப்பிடலாம். இது அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலனை அளிக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க பாதாம் மிகவும் உதவுகிறது.