‌நீ‌ரி‌ழிவு‌க்கு ஆவாரை மரு‌ந்தா‌கிறது

புதன், 2 டிசம்பர் 2009 (15:19 IST)
எ‌ளிதாக பல இட‌ங்க‌ளி‌ல் ‌‌கிடை‌த்த ஆவாரை த‌ற்போது பா‌ர்‌ப்பதே‌ற்கே அ‌ரிதா‌கி‌வி‌ட்டது.

எ‌னினு‌ம் அத‌ன் மரு‌த்துவ குண‌ங்க‌ள் ஏராள‌ம் ஏராள‌ம். ஆவாரை‌யி‌ல், இலை, பூ, த‌ண்டு‌ப் பகு‌தி, வே‌ர் என பலவு‌ம் மரு‌த்துவ கு‌ண‌ங்க‌ள் கொ‌ண்டவைதா‌ன்.

ஆவாரையின் 5 பாகங்களையும் இடித்து சலித்து சூரணமாக்கி கொள்ளவும். இதில் சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர, தேக வறட்சி நீங்கும். அடங்காத நீர் வேட்கையும் தணியும்.

வெள்ளை, உடல் சூடு, பித்தம், சுரம் குணமாகும். சர்க்கரை சேர்க்காமல் பருகி வர நீரிழிவு நோய்க்கு ஆவாரை கைகண்ட மருந்தாகும்.

ஆவாரைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி வடிக்கட்டிக் கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சர்பத் போல செய்து, அதை நீரில் கலந்து தினமும் குடித்து வர ஆண்,பெண் உறுப்புக்களில் ஏற்படுகின்ற எரிச்சலைக் குணமாக்கும். பெரும்பாடு, வெள்ளைபடுதல் தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்