மயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை

வெள்ளி, 2 மார்ச் 2012 (00:26 IST)
கொத்தமல்லி 200 கிராம்
சீரகம் 20 கிராம்
ஓமம் 20 கிராம்
மிளகு 20 கிராம்
சுக்கு 20 கிராம்
அதிமதுரம் 20 கிராம்

செய்முறை

கொத்தமல்லியை மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சீரகத்தையும் இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஓமத்தை சிறிது நெய்யிட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மிளகையும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் பால் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தவும்.

பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு இடித்து நன்றாக வடிகட்டவும். வடிகட்டிய தூளை ஒரு மணி நேரம் வெய்யிலில் வைத்து எடுத்து பத்திரப் படுத்தலாம்.

பயன் படுத்தும் முறை

காலை உணவு முடிந்தவுடன், முப்பது நிமிடங்கள் கழித்து அரை ஸ்பூன் தூளுடன், ஒரு ஸ்பூன் பனைவெல்லமும் சேர்த்து உட்கொண்டு சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். குறைகள் நீங்கினாலும் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். ஒரு தீங்கும் வராது.

வெப்துனியாவைப் படிக்கவும்