பூ‌ண்டி‌ன் மக‌த்துவ‌ம் அ‌றிவோ‌ம்

வியாழன், 15 ஏப்ரல் 2010 (12:30 IST)
வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.

பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். வா‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் பூண்டு நாற்றம் போய் விடும்.

சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.

வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை இருவேளையு‌ம் அருந்தலாம். வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.

பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்