புழுவெட்டுக்கு மிளகு மாமருந்தாகும்

செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (14:43 IST)
சிலருக்கு புழு வெட்டுக் காரணமாக தலையில் ஆங்காங்கே முடி கொட்டி சொட்டை சொட்டையாகக் காணப்படும்.

இதற்கு ஆங்கில மருந்தை விட கை மருந்தே நல்லப் பலனை அளிக்கும்.

வேறு எந்த மருத்துவ முறைக்குச் சென்றாலும் அதிக செலவாகுமேத் தவிர ஒரு முடியும் வளராது.

அதாவது, மிளகுத்தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சம அளவு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுதை புழு வெட்டு ஏற்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர, புதிய தலைமுடி வளரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்