ஜாதிக்காயின் பயன்கள்

புதன், 16 செப்டம்பர் 2009 (15:28 IST)
குழந்தைகளுக்கு கை முட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு ஜாதிக்காயை நீரில் உரைத்து அந்த இடத்தில் தடவி வர குணமாகும்.

அம்மை நோய் கண்டவர்கள், ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு, பருத்திப் பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர கொப்புளங்கள் வாடும்.

ஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

ஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.

ஜாதிப் பத்திரியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சுரம், பெருங்கழிச்சல், நீர் நீராய் ஏற்படுகின்ற பேதி முதலியன குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்