இலந்தை மரப் பட்டையின் குணம்

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (12:56 IST)
இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர, ஆறாத புண்ணும் ஆறும்.

இலந்தை இலையையும், பட்டையையும் ஒன்றிரண்டாக இடித்து குளிக்கின்ற நீரில் கலந்து காய்ச்சி குளித்து வர தலைக்குத்தல், குடைச்சல் நீங்கும்.

இலந்தையைப் பட்டையை இடித்து நீர்விட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வர சுரம் தணியும்.

இலந்தை மரத்தின் வேரை அரைத்து பூச மூட்டு வலி குணமாகும்.

இதன் வேர்ப்பட்டையை இடித்து பிழிந்தச் சாற்றை 15 மில்லி அளவு குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்