இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக் கொள்கிறது. இந்த தோல்விக்கு காங்கிரஸ் கட்சியை வழிநடத்திய ராகுல் காந்தி மட்டுமே காரணம் அல்ல. ஒட்டுமொத்த காரணிகளுமே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டன என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், பாஜகவின் தேர்தல் உத்தியும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மனப்போக்கும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்று கூறினார்.
தற்போதைய நிலவரப்படி பாஜக 335 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும், இதர கட்சிகள் 147 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.