ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மனுத்தாக்கல்

சனி, 12 ஏப்ரல் 2014 (15:45 IST)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உத்தர பிரதேசம் மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இராணி, ஆம் ஆத்மி சார்பில் குமார் விகாஸ் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அமேதி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
Rahul Gandhi Road show in Amethi constituency
அமேதி தொகுதியில் அடுத்த மாதம் மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. அமேதி தொகுதியில் கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஆம் ஆத்மி வேட்பாளர் குமார் விகாஸ் கடந்த ஒரு மாதமாக அமேதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் இன்று அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்காக அவர் டெல்லியிலிருந்து உத்தர பிரதேசத்துக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் அமேதிக்கு காரில் வந்தார். அமேதியில் அவர் வீதி உலா நடத்தினார். பிறகு மனுத்தாக்கல் செய்தார். 
 
ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் வந்தார். அமேதி தொகுதியில் ராகுலின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அமேதியில் ராகுல் காந்தி வெற்றி பெற பொறுப்பு ஏற்று பிரச்சாரம் செய்தார். அதுபோல் இம்முறையும் அமேதி தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்ய பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்