அமேசான், நெட்ஃபிளிக்ஸை ஊதி தள்ளிய Zee 5!!

சனி, 16 மே 2020 (15:34 IST)
ஜீ5 சேவை பயனர்களின் எண்ணிக்கை 259% உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 
கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன.
 
ஜஸ்ட்வாட்ச் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற சேவைகளின் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ஜீ5 சேவை பயனர்கள் 259% உயர்ந்துள்ளது, நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் எண்ணிக்கை 204%, அமேசான் பிரைம் வீடியோ பயனர்கள் எண்ணிக்கை 189% உயர்ந்துள்ளது. அதோடு ஜியோசினிமா 161%, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 149% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்