புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற மனநோயாளி

ஞாயிறு, 27 நவம்பர் 2016 (15:03 IST)
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் புலி இருக்கும் பகுதிக்குள் குதித்து புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல் விலங்குகளை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.
 
புலிகள் அடைக்கப்பட்டு இருந்த இடத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று புலிகள் இருக்கும் பகுதிக்குள் குதித்தார். புலிகள் சுமார் 35 அடி ஆழப்பகுதிக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
அந்த பகுதிக்குள் குதித்த வாலிபர் முகமது என்ற புலியை நெருங்கி சென்றுள்ளார். பாதுகாவலர்கள் தடுத்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஒரு வெள்ளை புலி இருக்கும் பகுதிக்குள் ஓடி ஒளிந்துகொண்டார். 
 
அந்த வாலிபர் வெள்ளை புலியின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். பின்னர் புலிகளுக்கு இரை கொண்டு போய் வைக்கும் வாயில் வழியாக அந்த வாலிபரை காவலர் ஒருவர் பிடித்து வெளியே இழுத்தார். அதன்பினார் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
தனக்கு உடல்நிலை சரியில்லை, கையில் பணம் இல்லை என்று அந்த வாலிபர் திரும்பத்திரும்ப கூறுவதால் மனநோயாளியாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்