இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர்: கிராம மக்கள் போராட்டம், துப்பாக்கி சூடு

புதன், 13 ஏப்ரல் 2016 (14:47 IST)
காஷ்மீரில் ராணுவ வீரரால் இளம்பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கட்ட விவகாரத்தில் குப்வாரா மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது மேலும் பரவாமல் தடுப்பதற்காக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

 
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் குப்வாரா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை கலைப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டது.
 
அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.
 
இந்நிலையில், தொடர்ந்து, போராட்டம் நடப்பதைத் தடுப்பதற்காக ஹந்த்வாரா, லாங்கேட் மற்றும் குப்வாரா ஆகிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து அங்கு சட்டம், ஒழுங்கை காப்பாற்ற நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்