13 ரூபாயில் மூன்று வேளை சாப்பாடு: எங்கு தெரியுமா??
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (11:24 IST)
உத்தரப்பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்ய நாத் பதவி ஏற்றதும் பல திட்டங்களை அறிவித்து வருகிறார்.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் ‘அன்னபூர்ணா கேன்டீன்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இங்கு காலை உணவு ரூ.3-க்கும், மதியம் மற்றும் இரவு உணவு தலா ரூ.5-க்கும் என மொத்தம் மூன்று வேளை சாப்பாடு ரூ.13-க்கு வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் 14 மாநகராட்சி பகுதிகளில் அன்னபூர்ணா கேன்டீன் தொடங்கப்படும் என தெரிகிறது. இதற்காக பயனாளிகளுக்கு பிரீபெய்டு கார்டுகள், டோக்கன்கள் வழங்கப்படும்.
காலையில் டீயுடன், இட்லி, சாம்பார், பருப்பு, பக்கோடா, கச்சோரி ஆகியவையும், மதியம் மற்றும் இரவில் 6 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு சால்னா ஆகியவை எவர் சில்வர் தட்டுகளில் வழங்கப்படும்.
அனைத்து கேன்டீன்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதற்காக சுத்திகரிப்பு சாதனங்கள் நிறுவப்படும் எனவும் அறிவித்துள்ளார்.