வருடத்திற்கு 3 சிலிண்டர், தினமும் பால் இலவசம்: கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை..!

திங்கள், 1 மே 2023 (11:51 IST)
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. 
 
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ரூபாய் 2000 உள்பட பல அறிவிப்புகளை காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளியிட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வருடத்திற்கு மூன்று சிலிண்டர் இலவசம், தினமும் அரை லிட்டர் பால் மற்றும் மாதம் ஐந்து கிலோ அரிசி இலவசம், வீடற்ற  ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் இலவசம் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகை என்று பல்வேறு சலுகைகளை கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
 
மேலும் ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்றும் தீபாவளி உகாதி மற்றும் விநாயகர் பண்டிகளுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரவாத குடியேறிகளை களைய பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவோம் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்