இந்தியாவில் மரணத் தண்டனை தொடர்ந்து அமலில்தான் இருக்கும்: அருண்ஜெட்லி

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (01:51 IST)
இந்தியாவில், மரணத் தண்டனை தொடர்ந்து அமலில் தான் இருக்கும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கருத்துத் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அருண்ஜெட்லி, ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், மும்பையில் நடந்த கலவரமும், தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களும் மன்னிக்க முடியாத பெருங்குற்றமாகும். இதை இந்தியக்குடிமகன் யாரும் மன்னிக்கமாட்டர்கள்.
 
இந்தியாவில் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் எனச் சிலர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். சட்டத்தின் விசாரணை மற்றும் நீதி மன்ற நடைமுறைகள் போன்றவைகளுக்கு உட்பட்டே தூக்கு நிறைவேற்றப்படுகிறது. எனவே, இந்தியாவில் தண்டனையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.
 
இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. யாகூப் மேமன் போன்ற தூக்குத் தண்டனை குற்றவாளிகள் அதைச் சந்தித்தே ஆகவேண்டும். தப்பிக்க முடியாது. எனவே, இந்தியாவில் மரணத் தண்டனை தொடர்ந்து அமலில் தான் இருக்கும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்