தெலுங்கா மாநிலத்தில் செல்போன் வெடித்து உயிரிழந்த பெண்

சனி, 11 ஜூன் 2016 (16:41 IST)
தெலுங்கானாவில் செல்போனை சார்ஜ் போட்டு அழைப்பை ஏற்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.


 

 
தெலுங்கானா மாநிலத்தில் கமிர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விமலா(28) இன்று அவரது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு வெலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. சார்ஜரில் இருந்த செல்போன் இணைப்பை அகற்றாமல் அப்படியே எடுத்து பேசியுள்ளார்.
 
திடீரென்று செல்போன் வெடித்து சிதறியது. அதில் விமலாவின் முகம் சிதைந்து சம்பவ இடத்திலே உயிர் பறிபோனது. மேலும் அவரது வீட்டில் இருந்த மற்றோரு பெண், பலத்த காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்