பெண்ணை அடித்து நிர்வாணப்படுத்தியதை வேடிக்கை பார்த்த காவல்துறையினர்

வியாழன், 17 ஜூலை 2014 (19:31 IST)
பீகாரில் நில விவகாரத்திற்காக ஒரு பெண்ணை அடித்து, உதைத்து நிர்வாணப்படுத்தியதை சும்மா நின்று வேடிக்கை பார்த்த காவல்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பீகார் மாநிலம் ஜெகனபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிஜாமுதீன்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர். சங்கீதா தேவி (வயது 40). இவர் நில விவகாரம் காரணமாக சக்தி சிங் என்ற வாலிபர் ஒருவரை கடத்தியதாக கூறபட்டது. இதை தொடரந்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக திரண்டுவந்து சங்கீதா தேவியின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்னர் சங்கீதா தேவியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து அவரை கடுமையாகத் தாக்கி அவரை நிர்வாணபடுத்தினர். 
 
இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கு நின்று இருந்த காவல்துறையினர் பார்த்த்க்கொண்டு இருந்தனர். அவர்கள் சங்கீதா தேவியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமபவம் நடந்து முடிந்த பின்னர் காவல்துறையினர் படுகாயம் அடைந்து இருந்த அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
பெண் தாக்கபட்டு நிர்வாணபடுத்தப்பட்ட சம்பவத்தை மாநில பெண்கள் ஆணைய தலைவி அன்ஜூம் ஆரா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி உள்ளார். இந்த விவகாரம் மாநில சட்டசபை கூட்டத்தில் எதிரொலித்தது. எதிர்கட்சிகள் இந்த சமபவத்திற்கு கண்டன குரல் எழுப்பின. இதை தொடர்ந்து பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி இந்த விவாகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்