ஆணுறுப்பில் எட்டி உதைத்த பெண்: சுருண்டு விழுந்த கொடூரன் மரணம்!

செவ்வாய், 29 நவம்பர் 2016 (13:01 IST)
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்ய வந்த நபரின் ஆணுறுபில் இளம் பெண் ஒருவர் எட்டி உதைத்ததில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
மஞ்சேனஹள்ளி என்ற கிராமத்தில் 36 வயதான மதனகோபால் என்ற நபர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அந்த பெண் காவல் நிலையத்தில் மதனகோபால் குறித்து புகார் அளித்தார்.
 
ஆனால் போலீஸ் மதனகோபால் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனாலும் மதனகோபால் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதை நிறுத்தவில்லை.
 
இந்நிலையில் அந்த பெண் வயலில் மாடுகளுக்கு உணவு அளித்துக்கொண்டிருக்கும் போது மதனகோபால் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மதனகோபாலின் ஆணுறுப்பில் எட்டி உதைத்துள்ளார். இதனால் மயங்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த மதனகோபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்