பள்ளி மதிய உணவு சுகாதாரமற்றது என கூறிய பெண் மருத்துவரை ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்திய அங்கன்வாடி அதிகாரி

வியாழன், 17 ஜூலை 2014 (17:31 IST)
பெங்களூர் புறநகர்  பகுதியில்  உள்ள ஒரு அங்கன் வாடி பள்ளியில்  மதிய உணவு வழங்கபட்டது. உணவு தரமற்றதாக வழங்கபட்டது என அந்த பகுதியை சேர்ந்த சுகாதார மைய பெண் மருத்துவர் புகார் கூறினார்.
 
இது தொடர்பாக அந்த கிராம பஞ்சாயத்து தலைவரிடம் மருத்துவர் புகார் கூறினார். ஆனால் அங்கன்வாடி தலைமை அதிகாரி இதை மறுத்தார். 
 
இதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி  ஒரு கும்பல் ஆரமப சுகாதார நிலையத்திற்குள் புகுந்து பெண் மருத்துவரை வெளியே இழுத்து வந்து அவரது ஆடைகளை அவிழ்த்து அவரை அவமானபடுத்தினர்.
 
இது குறித்து மருத்துவர் கூறிய புகாரின் அடிப்படையில் 5 பெண்கள் உள்பட பலர் செய்யபட்டு உள்ளனர். கிராமத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட வீட்டுகளில் இருந்தவர்கள் தலைமறைவானார்கள்.
 
இது தொடர்பாக காவல்துறையினர் ஐபிசி பிரிவு 354 பிரிவின் கிழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்