ஏடிஎம்களில் இனி ரூ.4000 வரை எடுக்கலாம்?

வியாழன், 29 டிசம்பர் 2016 (20:42 IST)
ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2500 மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையிலிருந்து டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ரூ.4000 வரை எடுக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


 

 
நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுபாடு மற்றும் சில்லரை தட்டுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலை 50 நாட்களில் சரியாகி விடும். மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 50 நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில் நிலைமை இனியாவது மாறுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
 
ஏடிஎம் மையங்களில் இதுவரை நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் கூறியபடி 50 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இனி ஏடிஎம் மையங்களில் இதுவரை நாள் ஒன்றுக்கு 4000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. 
 
ஆனால் இதுகுறித்து மத்திய அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்