கொரோனாவால் இளைஞர்கள் அதிகளவில் பாதிப்படைவது ஏன் ? ஐசிஎம்ஆர் இயக்குநர் விளக்கம்

புதன், 12 மே 2021 (21:53 IST)
கொரொனா இரண்டாம் கட்ட அலையில் பெரும்பாலும் இளைஞர்களே பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இது ஏன் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரொனா தடுப்பூசியாக கோவிஷீல்ட், வேக்‌ஷின் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் பெரும்பாளும் 25 வயதிற்கு மேலுள்ளவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணத்தை நேற்று ஐசிஎமார் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்க்கவா கூறியுள்ளதாவது: இளைஞர்கள் பொதுவெளியில் அதிகம்நடமாடுகின்றனர். ஊரடங்கு அமலில் இருந்தாலும் அதை தாண்டிச் செல்லும்போது, நிச்சயம் பாதிப்படைகின்றனர். முந்தைய கொரொனா மற்றும் தற்போதைய கொரோனா இரண்டிலும் சுமார் 70% பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான்.  மேலும் முதல் கொரொனா அலையின்போது, நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, 9.6% பேர் இறந்தனர். தற்போதைய 2 வது அலையின்போது,சுமார் 9.7% பேர் இறந்துவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய அலையை விட இந்த 2 வது அலையின்போது, இளைஞர்கள் முதல் பெரியோர் வரை ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்