ஊழல் விவகாரத்தில் மோடி மவுனம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளி, 10 ஜூலை 2015 (04:40 IST)
ஊழல் விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காத்து வருவதாக காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, டெல்லில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த மக்களவைத் தேர்தலின் போது நரேந்திர மோடி பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை அவருக்கு மீண்டும் நினைவுபடுத்த  விரும்புகிறேன்.
 
பிரதமராக நான் பதவியேற்றால், நானும் ஊழல் செய்ய மாட்டேன். யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என மோடி கூறினார். ஆனால், அவ்வாறு மோடி நடந்து கொள்ளவில்லை.
 
மேலும், லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ள உ.பி.முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்? என சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளார்.
 
அத்துடன், நாட்டில் நடைபெறும் ஊழல் விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்