வாட்ஸ் ஆப்பில் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்த தொழிலதிபர்

செவ்வாய், 22 ஜூலை 2014 (17:46 IST)
பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மும்பை டி.பி. மார்க் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் செல்போன் வாட்ஸ்–அப் வலைதளத்தில் ஆபாச படம் ஒன்று வந்தது. ஆனால் அதை அந்த பெண் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தநிலையில், ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்ச்சியாக ஆபாச படங்கள் வந்து குவிந்தன. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறினால் பிரச்சனையாகி விடும் என்று பயந்து சொல்லாமல் இருந்து வந்தார்.
 
இந்தநிலையில், ஆபாச படங்கள் அனுப்பும் ஆசாமியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் விரக்தி அடைந்த அவர், இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் கணவன், மனைவி இருவரும் டி.பி. மார்க் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் சம்மந்தப்பட்ட செல்போன் எண் சார்க்கோப் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் அல்பேஷ் மேத்தா(வயது29) என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அல்பேஷ் மேத்தாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
 
இதில், அந்த பெண்ணின் எண்ணில் இருந்து அடிக்கடி போன் அழைப்புகள் வந்ததால், அந்த எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக தெரிவித்தார். இதனையடுத்து அல்பேஷ் மேத்தாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்