மேற்கு வங்க தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய் ராஜினாமா

புதன், 7 அக்டோபர் 2015 (01:07 IST)
மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

 
மேற்கு வங்காள மாநிலத்தில், கடந்த சனிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பிதன் நகர் மற்றும் அசன்சால் கார்ப்பரேஷன் ஆகிய தொகுதிகளில் திடீர் என வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த இரண்டு தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினா கடிதத்தை ஆளுநர் கேஷ்ரி நாத் திரிபாதியிடம் வழங்கினார்.
 
தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய்  ராஜினாமா விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்