நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசியம் இன்று ரிலீஸ்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (04:56 IST)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை இன்று மேற்கு வங்க அரசு வெளியிட உள்ளது.
 

 
விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் மற்றும் பல்வேறு சந்தேகங்கள் பலரையும் வாட்டி வதைத்து வருகிறது. அவர் குறித்த பல தகவல்கள் ரகசியமாகவே உள்ளது. பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில்,  நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் 64 ஆவணங்களை வெளியிடப் போவதாக அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்தார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
 
மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்கள் கணினிமயம் செய்யப்பட்டு வருவதாகவும், அவைகள் செப்டம்பர் 18ம் தேதி கால தாமதம் இன்றி வெளியிடப்படும் என்றும் முதல்லர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று நேதாஜி சுபாஷ் சந்தி போஸ் குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்குவங்க தலைமைச் செயலக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
 
சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவணங்களை வெளியிட மத்திய அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில்தான், மேற்கு வங்க அன்று ரகசிய ஆவணங்களை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்