சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முடிவைக் கைவிடுமாறு ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார். மேலும், தன்னை டெல்லியில் ஏப்ரல் 3-ஆம் தேதி சந்திக்குமாறும் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற ஈஸ்வரப்பா, மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பினார். இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட ஈஸ்வரப்பாவை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி பாஜக அதிரடி உத்தரவிட்டுள்ளது.