”நேருவிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும்” - நேதாஜி உறவினர்கள்

செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (12:07 IST)
நேருவிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று நேதாஜி உறவினர்கள் கூறியுள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவருடைய பதவிக் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை உளவு பார்த்தார் என்று செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
 

 
தற்போது இந்த விவகாரத்தினால், நேருவின் அவரது உண்மை ரூபம் வெளிப்பட்டு விட்டதாக நேதாஜி உறவினர்கள் கூறியுள்ளானர். மேலும், நேருவுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது தொடர்பாக நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கூறுகையில், ”நேதாஜியின் சாதனைகளை அழிக்க நடந்த முயற்சி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நேருவைப் பற்றி தற்போது மக்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது திரும்பப் பெறப்பட வேண்டும்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்