சபரிமலையில் நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடு

சனி, 15 செப்டம்பர் 2018 (16:51 IST)
கடந்த மாதம் பெய்த கன மழையால் கடவுளின் தேசமான கேரளாவில் பல இடங்களின் நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

அதனையடுத்து அங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற புத்தரிசி, ஆவணி மாத பூஜைக்கும் திரிவோண பூஜைக்கும் பக்தர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நாளை சபரிமலை நடை திறக்கப்பட இருக்கிறது.ஆனால் அங்கு வரப் போகிற பக்தர்களுக்கு தேவசம் போர்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அதில் 

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் உணவு மற்றும் குடிநீர் கொண்டு வரவேண்டும்.வனத்தின் பக்கம் போகக் கூடாது என்று கூறியுள்ளனர்.

கேரளாவுக்குள் வெள்ளம் புகுந்த பின் அங்கு முழுமையான மறுசீரமைப்பு பணிகள் முடியாத நிலையுள்ளதால் தான் பக்தர்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்