தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.