வேலைக்கார பெண் சித்ரவதை - கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்கு

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (13:41 IST)
வேலைக்கார பெண்ணை அடித்து சித்தரவதை செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மணைவி மீது மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

 
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மும்பையில் தனது மணைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். அவர்களது இல்லத்தில், சோனி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார். ஆனால் வேலை செய்த அந்த 2 ஆண்டும் சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது.
 
இந்நிலையில், வேலைக்கார பெண் சம்பள பணத்தை கேட்டபோது, காம்பளி மற்றும் அவரது மணைவி இருவரும் அவரை தாக்கியுள்ளனர். மேலும், வேலைக்கார பெண்ணை மூன்று நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து, அடித்து சித்தரவதை செய்தும் உள்ளனர்.
 
பிறகு, 3 நாட்களுக்குப் பின்னர் வேலைக்கார பெண்ணை வெளியில் விட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டதும், மும்பை பந்த்ரா காவல் நிலையத்திற்க்கு சென்று தன்னை அடித்து துன்புறுத்தி 3 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து இருந்ததாக வினோத் காம்ளி மற்றும் மணைவி மீது புகார் அளித்துள்ளார்.
 
அந்த வேலைக்கார பெண் அளித்த புகாரின் பேரில், கிரிக்கெட் வீரர் காம்ளி மற்றும் அவரது அவரது மனைவி ஆண்ட்ரியா மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 342, 504, 506 மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்