வெங்கையா நாயுடுவின் அமைச்சர் பதவிக்கு திடீர் ஆபத்து

திங்கள், 17 ஜூலை 2017 (22:19 IST)
பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதில் இருந்தே நம்பிக்கைக்கு உரிய அமைச்சராக இருந்து வருபவர் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு. இந்த நிலையில் வெங்கையா நாயுடு தற்போது துணைக்குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



 
 
குடியரசு தலைவரை போலவே துணை குடியரசு தலைவரையும் எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களே தேர்வு செய்ய உள்ளதால் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே வேட்புமனு தாக்கல் செய்யும் முன் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திரமோடி அரசியல் கட்சி தலைவர்களிடம் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு கோரி தொலைபேசி மூலம் பேசி வருகிறார் என்றும் அவர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்