இது எப்படி இருக்கு - வாகனம் 50 ஆயிரம் ரூபாய்; வாகன எண் 8 லட்ச ரூபாய்

செவ்வாய், 12 மே 2015 (15:52 IST)
பஞ்சாப் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் 50 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தின், வாகன எண்ணை வாங்குவதற்கு 8 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்.
 

 
பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் கன்வல்ஜித் வாலியா ஹோண்டா ஆக்டிவா என்ற இரு சக்கர வாகனத்தை ரூ.50 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். அந்த வாகனத்திற்கான வாகன எண்ணிற்காக தனக்கு பிடித்த சி.எச்.01 பி.சி. 0001 [CH01 BC 0001] என்ற எண்ணைக் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
 
இதற்கான ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் தொழிலதிபர் வல்ஜித் வலியா கலந்து கொண்டுள்ளார். 70 ஆயிரத்திலிருந்து தொடங்கிய இந்த ஏல நிலவரத்தின் முடிவில் இந்த எண்ணை 8.1 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்