தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை: நிர்ணயம் செய்தது மத்திய அரசு

செவ்வாய், 8 ஜூன் 2021 (21:38 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிகளை பணம் வாங்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் இஷ்டத்திற்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தந் இலையில் தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்துள்ளது 
 
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூன்று தடுப்பூசிகளுக்குமான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசிகளின் விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
 
கோவாக்சின் விலை ரூ.1410 
 
கோவிஷீல்டு விலை ரூ.780 
 
ஸ்புட்னிக் வி விலை ரூ.1140 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்