கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் நிலச்சரிவின் மீது இந்த நகரம் பின்னாளில் அமைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஜொஷிமத் நகரம் நிலச்சரிவுகள் மற்றும் பிளவுகளால் மூழ்கி வருகிறது. 4,500 கட்டிடங்கள் கொண்ட அந்த நகரத்தில் 610 கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு வாழத்தகுதியற்றவையாக மாறியுள்ளன.
அந்த கட்டிடங்களில் வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அந்த நகரத்தில் உள்ள மொத்த மக்களையும் வெளியேற்ற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் ஜொஷிமட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் ஆண்டுக்கு 6.5 செ.மீ என்ற கணக்கில் நிலத்திற்குள் புதைந்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.