மேகி நூடுல்ஸ் மீதான தடை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (17:47 IST)
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் தயாரிப்பான மேகி நூடுல்ஸிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலு ஒரு மாதத்திற்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் கேன்சர் நோயை உருவாக்கும் காரியம் மற்றும் அளவுக்கு அதிகமாக ரசாயன கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக கூறி அதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் 3 மாதத்துக்கு தடை விதித்தது.
 
மேகி நூடுல்சின் மாதிரி சோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ருத்ராபூரில் உள்ள சோதனை நிலையத்தில் சோதனை செய்து பார்த்தபோது, மேகி நூடுல்சில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி நெஸ்லே நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது உத்தரகாண்ட் அரசு மேகி நூடுல்சில் கலப்படம் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.
 
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை நீக்க மறுத்து விட்டது. மறு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட 3 மாத தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து அரசு செவ்வாயன்று உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்